வியாழன், 20 அக்டோபர், 2016

A Warm Welcome.

அன்பான  வரவேற்பு.
                        தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 யை அறியும் ஆவலில் இவ் வலைத் தளத்துக்குள் (Website) நுழைந்துள்ள ஆர்வர்களை தேசிய தகவல் பெறும் உரிமைச் சட்ட சேவை  மையம் (NATIONAL right to information act SERVICEABLE HUB) உங்களை அன்புடன் வவேற்கிது.  

மேலும் வாழ்வியலுக்கு தேவையானா  பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் தெரிந்து கொள்ள கீழ் கண்ட வலை தளத்தை பாருங்கள் ( WEBSITE )      


SELF INTRODUCTION.

Hi, Dear Friends & Relatives, i am A.B.Natarajan, Advocate. Now i want to initiate awareness about RIGHT TO INFORMATION ACT-2005 among common people. For that purpose i start this blog. I came to know that number of website about RTI act in English. SO i developed our blog in Tamil. Dear friends kindly help me to send use-full information s about this act and send your valuable suggestions to shape up our blog and post your Quarries about this Act.
With
Warm Regards,
A.B.Natarajan(9444428699),
Email:rtinathub@gmail.com
A.B.Natarajan,                                      A.B.நடராஜன்,
PLOT No: 79, (First Floor),                   பிளாட் நம்பா் 79, (முதல் மாடி),
Sorna Meena Nagar, 3rd street,            சொர்ண மீனா நகர், 3 வது தெரு,
Thiru Mohoour Road, Y.othakkadai,      திருமோகூர் சாலை, Y.ஒத்தகடை.
Madurai -625107. Cell. 9444428699.    மதுரை -625107. Cell. 9444428699.

The Topies of This Website.

இவ் வலை தளத்தில் உள்ள தகவல்கள்.  
@அன்பான வரவேற்பு. (A Warm Welcome).

@சுய அறிமுகம். (self introduction).

@தகவல் பெறும் உரி.சட்டம் தமிழ் வழிகாட்டி கையேடு.

@த.பெறும்.உ சட்டம் பற்றி மேலும் அறிய உதவும் வலைத் தளங்கள்.(Some Useful R.T.I Websites Links).

@த.பெறும்.உ சட்டஆர்வலர்களுக்கு ஒரு அன்பானவேண்டுகோள்.(Invite Volunteers.).

@த.பெறும்.உ சட்டப்படி மனுவினைத் தயார் செய்ய வழிகாட்ட உதவுபவர்கள் (Helpers To File R.T.I. Application In Tamil nadu).

@த.பெறும்.உ சட்ட த்தை பொதுமக்களுக்கு பயிற்சி கொடுப்பவர்கள். (R.T.I Trainers In Tamil Nadu).

@தகவல் ஏன் நமக்குத் தேவைப்படுக்கிறது ? (why we need information ?).

@எவை தொடர்பான தகவல் கேட்கலாம்.

@எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்.

@யாரிடம் கேட்கவேண்டும் (Who Is Response To get Our RTI Application) .

@எந்த பொ.த.அதி(PIO)அனுப்புவது என தெரியவில்லை எனில்.

@தவரான முகவரிக்கு(PIO) நமது மனுவினை அனுப்பிவிட்டால் ?

@யார் தகவல் கேட்கலாம். (who can seek information ?).

@எத்தனை ஆண்டுகளுக்கான தகவலை கேட்கலாம் ? (How Many Years Information, We Can Seek ?.

@விண்ணப்பிக்கும் முறை (Method Of Apply).

@Sample RTI Applications for various problems.

@விண்ணப்பமொழி. (Application Language).

@மனு எழுத யார் உதவவேண்டும் ?(who can help to prepare application ?).

@கட்டண விபரம். (Details Of Fees).

@கட்டண விலக்கு (Fee Exemptions).

@தகவல் தர கால அளவு.

@மேல் முறையீடு செய்தல். (Appeal).

@விலகளிக்கப்பட் தகவல்கள் மற்றும் துறைகள்.(Exemptions from Disclosure).

@ஆணையத்திற்க்கு உள்ள நீதிமன்ற அதிகாரம். (The Powers Of The Information Commission).

@தவறுசெய்யும்அதிகாரிக்கு(PIO)---அபராதம் மற்றும் தண்டனைகள். (Penal Provisions).

@த.பெறும்.உ சட்டம் பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள். (Court Judgements about R.T.I act).

@த.பெறும்.உ சட்டத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவைகள் (Success Stories).

Some Useful R.T.I Websites Links.

த.பெறும்.உ சட்டம் பற்றி மேலும் அறிய உதவும் வலைத் தளங்கள். 

R.T.I. Guidance -- Tamil version.

தகவல் பெறும் உரி.சட்டம் தமிழ் வழிகாட்டிபுத்தகம் கையேடு 

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிந்துகொள்ள தமிழ் நாடு அரசின் சார்பாக வெளியிடபட்டுள் தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம்(Download) செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.

. Invite Volunteers.

த.பெறும்.உ சட்ட ஆர்வலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். 
                           @தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொதுமக்களுக்கு பயிற்சி கொடுக்கவும்(Trainers), இச் சட்டப்படி மனுவினைத் தயார் செய்ய வழிகாட்வும் (Guidance), விரும்பும் ஆர்வலர்கns! தங்களின் பெயர், முகவரியை அனுப்பி நமது சேவை மனைப்பன்மையை இவ் வலைத் தளத்தின்(Website) மூலம் வெளிடுத்துவோம்.   
A.B.Natarajan(9444428699),
Email:rtinathub@gmail.com
         

Helpers To File R.T.I. Application In Tamilnadu.

த.பெறும்.உ சட்டப்படி மனுவினைத் தயார் செய்ய வழிகாட்ட உதவுபவர்கள்.
A.B.Nataraj( மதுரை).
Jayaval(குளித்தலை).    P.Esakkimuthu(தூத்துக்குடி).    R.Madhusudhanan(சென்னை). RupeshKumar(சென்னை).    R.P.Vallinayagam(பாளையங்கோட்டை).    MS Trust RTI act help line(0-97181-00180).

R.T.I Trainers In Tamil Nadu.

த.பெறும்.உ சட்ட த்தை பொதுமக்களுக்கு பயிற்சி கொடுப்பவர்கள்.
5th Piller(சென்னை). Ameerkhan(சென்னை). J.Ashok kumar(திருவண்ணாமலை). V.Madhav.

why we need informations ?


தகவல் ஏன் நமக்குத் தேவைப்படுக்கிறது ? 
                       @ ரு செயலைச் செய்ய ஒரு குறிப்பிட்ட தகவல் இல்லையன்றால், நம்மால் ஒரு முடிவினை எடுக்க முடியாது. எனவே நமக்குத் தேவையாதகவல்களைத் கொண்டே செம்மையான முடிவினை எடுத்து திமையாக செயல்பட்டு, வெற்றி பெற முடியும். எனவே தகவல் என்பது நமக்கு  அவசியமான ஒன்றாகும்.                      

which informations we seek?

1.தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன?                                                2.அதை எப்படிப் பெறுவது?                               3.எவை தொடர்பான தகவல் கேட்கலாம் ?             @அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அரசாங்கத்திடம் இருக்கும் வெளிப்படையாக தரக்கூடிய  தகவலை பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது.                                                        யாரிடம் தகவல் கேட்கலாம்?
@ரசு நிருவனங்கள் மற்றும் அரசு உதவி பெரும்
      நிருவனங்கள்.                                                                                     @அரசின் நிதி உதவியை நேரடியாகவோ   
      மறைமுகமாகவோ பெரும் அரசு சாரா            
      அமைப்புகள்.
   
@ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ், அரசு அதிகாரிகள்  
          மேற்பர்வையிடும் அதிகாரம்       
          கொண்ட தனியரர் அமைப்புகள்.
.
எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்.
@பதிவேடுகள், ஆவணங்கள், மெமோ எனப்படும்  
    அலுவலக குறிப்புகள்.
@கருத்துரைகள், அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள், @அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்,
@சுற்றறிக்கைகள், ஆவணகள், ஒப்பந்தங்கள், 
    கடிதங்கள், முன்வடிவங்கள், மாதிரிகள்.
@கணீனி சார்ந்த பதிவுகள், மின்னஞ்சல்கள்.
@பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்.
@சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்   
    பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை, 
@நகல் எடுக்கும் உரிமை ஆகியன 
    உறுதிப்படுத்தபட்டுள்ளன.

Who Is Response to get our RTI Aapplication?

யாரிடம் கேட்கவேண்டும்.
@வ்வொரு அரசு அலுவலங்களிலும், ஒரு  
     பொது தகவல் அதிகாரியும் (PIO-Public information  
     officer), 
     ஒரு மேல் முறைட்யீடு அதிகாரியும் (Appellate  
     PIO-Appellate public information officer)
     நியமிக்கபட்டிடுருப்பர். 
@ மாநில தலைமை அலுவலகங்கள் இல்லாது 
      மாவட்ட/ வட்டார/ உள்ளாட்சி அளவில்   
      உதவி தகவல் அதிகாரி (Assistant PIO-Assistant  
     Public information officer) தகவல் கொடுக்க 
      பொறுப்பானவர். 
பொது தகவல் அதிகாரி  (PIO-Public information officer).                     
@ தகவல் தருவது பொது தகவல் அதிகாரி(PIO-
      Public information officer)  யாவர், என்பதால் நமது 
      மனுவினை  வரிடம் கொடுக்வேண்டும்.

@ இவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.
@உதவி தகவல் அதிகாரி (Assistant--PIO)35 
      நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.
@ கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் 
      தரமறுக்கப்பட்டால்,
@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,
@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,
@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி 
      இருந்த்தால். 

@ சம்மந்த்ப்பட்ட துறையில் உள்ள மேல் 
      முறைட்யீடு அதிகாரிக்கு (AppellatePIO-Appellate 
      public  information office)மேல் முறையீடு  
      செய்யலாம்.
மேல் முறைட்யீடு தகவல்அதிகாரி (Appellate PIO-Appellate public information officer)
குறிப்பு: மேல் முறைட்யீடுக்கு கட்டணம் இல்லை.  
குறிப்பு:மேல் முறைட்யீடு செய்யும்போது  நாம் பொ. த. அதி (PIO )                 
                        அனுப்பிய   மனுவின் நகலை ணைக்வேண்டும்.
@ இவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.
@ கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள் 
      தரமறுக்கப்பட்டால்,
@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,
@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,
@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி 
      இருந்த்தால்.  

@மத்திய அரசுக்கான மனு எனில் மத்திய தகவல்  
     ஆணையத்திடமும்,மாநில அரசுக்கான மனு 
     எனில்மாநில தகவல் ஆணையத்திடமும் மேல்  
     முறையீடு செய்யலாம்.
மாநில தகவல் ஆணையம். (State Information Commission)

குறிப்பு: இம் மேல் முறைட்யீடுக்கும் கட்டணம் இல்லை.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையதின் முகவரி. 
Tamil Nadu Information Commission
No.2, Theagaraya Salai, Near Aalai Amman Koil,
Teynampet, Chennai - 600 018
(Post Box No. 6405, Teynampet, Chennai - 600 018)

Phone: 044- 24347590
Fax: 044 - 24357580 
email : sic@nic.in
எண் : 2 தியராஜர் சாலை, 
ஆலயம்மன் கோவில் அருகில் தேனாம்பேட்டை,சென்னை 600 018.


தவரான முகவரிக்கு(PIO) நமது மனுவினை அனுப்பிவிட்டால் ?
@நமது மனுவிற்கான தகவல் தன்னிடம் இல்லாவிட்டால், மனுவை மனுதாரருக்கு திருப்பி அனுப்பகூடாது.
@இச் சட்ட பிரிவு [6(3)]படி தகுந்த பொ.த.அதி(PIO)க்கு அனுப்புவர்கள்.
@ அனுப்பிய தகவலை நமக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
எந்தபொ.த.அதி(PIO)அனுப்புவதுஎனதெரியவில்லைஎனில்
@ மாநில அரசுக்கான மனு எனில்: உங்களது 
      மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு(District 
      Collector Office) அனுபினால்  அவர்கள் நம் 
      மனுவை   த.பெறும்.உ சட்டபிரிவு 6(3) படி தகுந்த 
      பொ.த.அதி(PIO)க்கு அனுப்புவர்கள்.
@ அனுப்பிய தகவலை நமக்கு 5 நாட்களுக்குள் 
      தெரிவிக்க வேண்டும்.
@மத்திய அரசுக்கான மனு எனில்:
பெறுனர்,
அஞ்சல்கங்களின் கண்காணிப்பாளர் (Superintendent Of Post Office),
கோட்ட தலைமை அஞ்சல் அலுவலகம்(Divisional Head Post Office).------------ PIN-CODE .
@நமது ஊருக்கு சம்மந்தப்பட்ட கோட்ட தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு (Divisional Head Post Office) அனுப்பினால் அவர்கள் நம் மனுவை தகுந்த பொ.த.அதி (PIO) க்கு அனுப்புவர்கள். இவ் அலுவலகம் பற்றி நமது பகுதி தபால்காரரிடம் கேட்டுதெரிந்து கொள்ளலாம்.

who can seek information ?

யார் தகவல் கேட்கலாம்.
@ இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும்.
@ தனி நபராக அல்லது அமைப்பாக தகவல்  
    கோரலாம்.

Method Of Apply.

விண்ணப்பிக்கும் முறை.
@ இதற்கென்று தனி விண்ணப்பம் தேவையில்லை.
@ ஆங்கிலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட 
     தமது மாநில மொழியில்.
@ எழுத்து மூலமாக கைபட தெளிவாக எழுதலாம்    
    ‘டைப்’ செய்து மற்றும் 
     மின்னணு வடிவில்.
@ ஒரே விண்ணப்பத்தில் அந்த துறை சார்ந்த    
        எத்தனை கேள்விகள் வேண்டுமானலும்   
        இருக்கலாம்.
@ தகவல் கேட்பதற்கான காரணத்தை கூறத் 
      தேவையில்லை.
@ என்ன தகவல் கேட்கிறோம் என்னும் விபரமும்,  
    கேட்பவரின் முழு முகவரியும் இருக்கவேண்டும்.
@ தகவல் என்ன வடிவத்தில் வேண்டும் (சிடி/ 
     பிளாப்பி/ நகல்/ டிவிடி/ஈமெயில்) என்பதை 
     குறிப்பிடவேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பம் மாதிரி படிவம்-Sample RTI Applications for various problems.

@ தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோர இப்படி தான் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாதிரிப் படிவம் ஏதும் கிடையாது.                  

@ சாதாரனமாக வெள்ளை பேப்பரில் கையால் தெளிவாக எழுதி தகவல் கேட்டு விண்ணப்பிதால் போதும். 

@  தகவல் கோரும் உரிமை சட்ட (கட்டணம்) விதிககளில் உள்ள விதி 3-ல் படிவம் அ -ல்(Form-A) யில் ஒரு மாதிரி (MODAL) படிவம் பொதுமக்கள் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளதுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1) கீழ் விண்ணப்பிக்கும் அசல் (Original ) மனு,

மாதிரி படிவம்-Modal Form                                                                                                   

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1) கீழ் விண்ணப்பிக்கும் அசல் (Original ) மனு.                                                                                                             
[ பதிவ தபால் ஒப்புகை அட்டையுடன்- Registered Post With Acknowledgement]                                                                                                                                                                                                                                                                                                                                      தேதி
                

பெறுதல்:                                                   
பொது தகவல் அலுவலர் 

1. விண்ணப்பதாரர் பெயர்: 
 2. விண்ணப்பதாரர் முகவரி: 
 3. தகவல் பற்றிய விபரம்:  
(அ) சம்மந்தபட்ட துறை:                                                                                                                                    ரூ 10 க்கு உரிய நீதிமன்ற கட்டண வில்லை (ஆ) தேவைபடும் தகவல் பற்றிய விவரங்கள்:                                       (Court Fee Stamp)

 4. நான் கோரும் தகவல் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில் அது தங்கள்  அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன். 

 5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ.10/- க்கு நீதிமன்றகட்டண வில்லைகள் செலுத்தியுள்ளேன். 
                                                                 (விண்ணப்பதாரர் கையொப்பம்) 
இடம்: 
 நாள்: 

who can help to prepare application ?

மனு எழுத யார் உதவவேண்டும் ?
@பொது தகவல் அதிகாரி (PIO) அல்லது உதவி 
     தகவல் அதிகாரி (Assistant PIO) மனு எழுத, மேல் 
   முறையீடு செய்ய மனுதாரறுக்கு உதவ வேண்டும்.
@ வாய்மொழி விண்ணப்பத்தை எழுத்து வடிவில் 
      மாற்ற இரு அதிகாரிகளும் உதவவேண்டும்.
@ உடல் ஊனமுற்றோர்கும் தகுந்த உதவி செய்ய  
      வேண்டும்.

Application Language.

விண்ணப்பமொழி.
@ ஆங்கிலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தமது 
      மாநில மொழியில். 
@ மத்திய அரசு அலுவலகத்துக்கும் தமிழிலே   
       விண்ணப்பிக்கலாம். 

How Many Years Information, We Can Seek ?

எத்தனை ஆண்டுகளுக்கான தகவலை கேட்கலாம் ?
@20 ஆண்டுகளுக்குள் உள்ளன தகவலை கேட்கலாம்.

Fees.

கட்டண விபரம்
@மனுதாரர் சம்மந்தப்பட்ட துறைக்கு நேரில் 
      சென்று ரூ.10 விண்ணப்ப கட்டணம் ரொக்கமாக 
      செலுத்தி ரசீது பெறலாம்.  
@ ரூ.10 விண்ணப்ப கட்டணம் (கோர்ட் பி 
      ஸ்டாம்பு(Court Fee Stamp), டி.டி.(DD), போஸ்டல் 
      ஆர்டர்(Postal Order).
@ கூடுதல் கட்டணம் இருந்தால், அதிகாரி 
      மனுதாரறுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்க 
      வேண்டும்.
@ கணினி சார் பதிவுக்கு [சிடி(CD)/ பிளாப்பி(Floopy)/ 
      டிவிடி(DVD)] கூடுதலாக ரூ.50.
@ அச்சிலுள்ள தகவல்களை நகல்(Xerox) எடுக்க  
       பக்கத்துக்கு ரூ.2.
@ ஆவணங்களை நேரில் பார்வையிட முதல் 1  
      மணி நேரம் கட்டணமில்லை.  
      கூடுதலாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.5.

Fee Exemptions.

கட்டண விலக்கு. 
@.வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் அதற்குரிய 
     சானறின் நகலை அனுப்பினால் எவ்வித  
     கட்டணமும் இல்லை.

Time Period.

தகவல் தர கால அளவு.
@ விண்ணப்பித்த 30 நாட்களுக்குள். 
@ உயிர் மற்றும் சுந்த்திரம் காக்கும் 48 மணி          
      நேரத்திற்குள்.(the life and liberty of a person)
மேல் முறையீடு செய்தல்.
@ கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்டால், 
@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,
@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால், 
@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி 
      இருந்த்தால்.
@ சம்மந்த்ப்பட்ட துறையில் குறிப்பிட்ட தகவல் 
     அதிகாரிக்கு மேலுள்ள, மேல் முறையீட்டு 
     அதிகாரிக்கு முறையீடு செய்யலாம்.
@ அவரிடமிருந்த்தும் 30 நாட்களுக்குள் சரியான 
      பதில் கிடைக்காவிட்டால் மத்திய மாநில 
     அரசுகளின் தகவல் ஆணையத்திடம் புகார் 
     செய்யலாம்.

Exemptions from Disclosure:

தகவல் பெறக் அல்லது கொடுக்கக் கூடாதவை.

இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1)[1] இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
@(அ) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,
@(ஆ) நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.
@(இ) நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.
@(ஈ) வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.
@(உ) ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.
@(ஊ) வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.
@(எ) ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.
@(ஏ) புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.
@(ஐ) அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.
குறிப்பு-; அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.
@(ஒ) பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.

The Powers Of The Information Commission.

ஆணையத்திற்க்கு உள்ள நீதிமன்ற அதிகாரம்.
@மேல் முறைட்யீடு அல்லது புகார் ஆகியவற்றை விசரிக்கும்போது
       ஒர் உரிமைஇயல் நீதி மன்றத்திற்க்கு உள்ள அனைத்து
       அதிகாரங்களும்ஆணையத்துக்கும் உண்டு.
@மேலும் தண்டனைகள்,அபராதகள் விதிக்கவும் அதிகாரம் உண்டு.

Penal Provisions:

தவறுசெய்யும்அதிகாரிக்கு(PIO)---அபராதம் மற்றும் தண்டனைகள்.
@பொ.த.அதி(PIO) தவறு செய்ததாக தெரிந்தலோ,அல்லது
@வேண்டும் என்றோ தகவல் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது
@தவறான தகவல் கொடுத்து இருந்தாலோ,
@நாள் ஒன்றுக்கு Rs 250 வீதம் அதிகபச்மாக Rs 25000 வரைபொ.த.அதி(PIO)க்கு       தகவல் ஆணையம் அபராதம் விதிக்கலாம்.
@இவ் அபராதத் தொகை சம்மந்தப்பட்ட அதிகாரி சம்பளத்தில் பிடித்து அரசு 
       கருவுலதில் சேர்க்கபடும்.
குறிப்பு:பொ.த.அதி(PIO) அதிகபச்மாக Rs 25000 வரை அபராதம்
                  கட்டினாலும் அதன்பின்பும் சரியான தகவலை தரவேண்டும்.

Penal Provisions:
Every PIO will be liable for fine of Rs.250/- per day up to a maximum of Rs.25,000/- for-

* not accepting an application;

* delaying information release without reasonable cause;

* malafidely denying information;

* knowingly giving incomplete, incorrect, misleading information;

* destroying information that has been requested; and

* obstructing furnishing of information in any manner.

The Information Commission can also recommend disciplinary action for violation of the law against an erring PIO.